Wednesday, December 9, 2009

ஈழத்தில் இனவழிப்பு நடந்தா ? ஒரு அவலப்பதிவு

Posted by soundarasolan On 3:43 AM 2 comments

  சமூகவியல் வல்லுனர்களும் இனவழிப்புப்பற்றிய தெளிந்த சிந்தனையுடையே குற்றவியல் வல்லுனர்களும்  கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து ,அக்கொடுமையின்  படிநிலைகளை பற்றியும் ஒவ்வொரு படிநிலையிலும் எவ்வாறு அதை தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பது பற்றியும்
இனவழிப்பு  நடந்து விட்டால் அதை எவ்வாறு மீண்டும்  நடவாமல் தவிர்க்கலாம் என்பது பற்றியும் தெளிவாக வரையறுத்து அறிவித்துள்ளார்கள்.

   இனவழிப்பு என்றால் என்ன?
    திசம்பர்மாதம்  9 ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் அவையின் பொது சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனவழிப்புப்பற்றிய வரையறைகளின்படி இனவழிப்புக்கொடுமையாவது;
  ARTICLE 2  இன் படி
    உள்ளப்பூர்வமாக முழுமனதுடன் ஒரு தேசிய,இன ,மத  குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்தொழிக்கும் எண்ணத்துடன் கீழ்க்காணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது :
  1.  குழுவின் உறுப்பினர்களை கொலைசெய்வது 
  2.  குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ தீங்கிழைப்பது 
  3.  அவர்களின் வாழ்வாதாரங்களை முழுமையாகவோ பகுதியாகவோ  அழிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்           
  4.   குழுவில் குழந்தைப்பிறப்புகளை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்      
  5.    ஒரு குழுவிலிருந்து வேறொரு குழுவிற்கு குழந்தைகளை வலுக்கட்டாயமாக மாற்றுதல்       
கீழ்க்காணும் நடவடிக்கைகள்  தண்டனைக்குரியது( ARTICLE 3)(மரணதண்டனை மட்டுமே ஒரே தண்டனை)
  1.   இனவழிப்பு 
  2.   இனவழிப்பு தொடர்பான சதியாலோசனை 
  3.   நேரடியாகவோ அல்லது பொதுவாகவோ இனவழிப்பை தூண்டுதல் 
  4.    இனவழிப்புக்கான  முயற்சி  
  5.    இனவழிப்பில் பங்கெடுப்பு  
  ஈழத்தில் இனவழிப்பு நிகழ்ந்ததா என்று பார்ப்பதற்கு முன் ,வல்லுனர்கள் கூறும் படிநிலைகளை பற்றிபார்ப்போம்.
       இனவழிப்பானது கீழ்க்காணும் எட்டு படிநிலைகளை கொண்ட  ஒரு கொடூர நிகழ்வாகும்.
        நிலை 1 :  குழுக்களிடையே வகைப்படுத்துதல்

        நிலை 2 :  குழுக்களை அடையாளப்படுத்துதல் அல்லது குறியிடல்
                       முதல் இரண்டு நிலைகளும் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். ஆகையால்இனவழிப்பு நடைப்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு.ஆனால் அடுத்த நிலைக்கு போகும்போது இனவழிப்புக்கான சாத்தியம் அதிகம். ஈழ நிகழ்வுகளை மூன்றாம் நிலையிலிருந்து நாம் பொருத்திப்பார்த்து இனவழிப்பு நடந்ததா என்று பார்ப்போம்.
        நிலை 3 :   பகைக்குழுவின் மனிதத்தை மறுதலித்தல்
                         சிங்களவன் மகாவம்ச மனவமைப்பிலே இருப்பவன் .மகாவம்சமானது தமிழனை இரண்டாந்தர மக்களாக உருவகப்படுத்துகிறது.மொத்த  இலங்கையும் சிங்களவனுக்கே சொந்தமானது என கூறுகிறது. பலநூறு ஆண்டுகளாக தமிழின விரோத மனப்பாங்குடைய பெரும்பான்மையானவனான சிங்களவன்  ,சிறுபான்மை தமிழனுடைய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்து  அடிமைப்படுத்துவதிலே  தீவிரமாக இருக்கிறான்.

        நிலை 4 :   பகைக்குழுவுக்குஎதிராக  கட்டமைப்புகளை உருவாக்குதல்
                          சிங்களவன் வேறு எந்த போக்குழுக்களையும் உருவாக்கி ஏவிவிடாமல்அல்லது மறைமுகமாக இருந்து போரிடாமல் பகிரங்கமாகவே  தமது நாட்டின் முப்படைகளையும் தமிழனுக்கு எதிராகவே கட்டமைத்து  பெரும்திரள் கொலைகளில் ஈவிரக்கமின்றி ஈடுப்பட்டான்.
        நிலை 5:   எதிர் எதிர் துருவங்களுக்கு விரட்டி அடித்தல் 
                  சிங்களவன் பொதுமக்களுக்கு தமிழின விரோத கருத்துகளை விதைத்து நிரந்தர எதிரிகளாக மாற்றிவிட்டான்..மாகவம்சமும் சில தீவிரவாதிகளின்  நூல்களும் பகையை மூட்டிவிட்டன.இனவழிப்பை தடுக்கவல்ல சிங்கள மிதவாதிகளையும் ஊடகவியல் அறிஞர்களையும் தளைப்படுத்தி அல்லது கொன்றொழித்து அமைதிக்கான வாசலை நிரந்தரமாக மூடிவிட்டான்.
        நிலை 6 :   பகைக்குழுவைப்பற்றிய ஆதாரங்களை ஆவணப்படுத்துதல்
          தமிழனை ஆதாரங்கள் தேவைப்படவில்லை .எந்தொரு தமிழனும் சிங்களவனின் கொலைப்பட்டியளிலும் எளிதில் கொன்றொழிக்கப்படும் நிலையிலே இருக்கிறான்.தீவிரவாதத்திற்கெதிரான போர் என்று கூறிக்கொண்டு பாதுகாப்பு வளையத்திற்கு மக்களை வரவழைத்து பெரும்திரள் கொலை செய்தது உலகத்திற்கு நன்றாகவே தெரியும்.1983 ஆம் ஆண்டு கருப்பு ஜூலை மாதத்தில் சிங்களவன் வாக்காளர் பட்டியலை கையில்வைத்துகொண்டு  வீடு வீடாக சென்று தமிழனை கொலைசெய்தது மெய்ப்பிக்காமல் விட்ட ஒரு இனவழிப்பே.
        நிலை 7 :   பகைக்குழுவை அழித்தொழித்தல் 
            இனவிடுதலைபோரில் சுமார் இரண்டு லட்சம் அப்பாவி பொது மக்களும் முப்பதாயிரம் போராளிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும்  சாட்சிகளற்ற படுகொலைகளாகவே இன்றுவரை இருக்கிறன்றன . இறுதிகட்ட போரில் சுமார் 25,000 மக்கள் கொல்லப்பட்டதாக சான்றுகள் உள்ளன.கொத்தணி குண்டுகள் .ரசாயன குண்டுகள் ,போன்ற தடைசெய்யப்பட்ட பெருந்திரள்கொலைக்கான ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்றது அம்பலமாகி இருக்கிறது.இன்னும் 3 லட்சம் மக்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்து போதிய  குடிநீர்,உணவு,மருத்துவம் ,சுதந்திர நடமாட்டம் போன்றவற்றை  மறுதலித்து மெதுவான நீடித்த இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.            
        நிலை 8:   இனவழிப்பை மறுத்தல்
                         .நிலை3 மற்றும் அதற்கு மேல் உள்ள நிலைகளில்  நிகழ்வுகள் தீவிரமடையும் போது அது கண்டிப்பாக  இனவழிப்பிற்கு இட்டு செல்லும்.
                      இவை அனைத்து நிலைகளும் ஈழ தமிழ் இனவழிப்புக்கும் சாலப்பொருந்தும்.என்றாலும்  நாம் இப்போது கடைசி படிநிலையான இனவழிப்பை மறுத்தல் பற்றி மட்டும் பார்ப்போம்.
           இனவழிப்பை மறுத்தல்
                இந்த இறுதி படிநிலையே இனவழிப்பு நிகழ்த்தப் பட்டதற்கான  உறுதியான குறியீடாகும் .குற்றவாளி பெரிய பள்ளங்கள் தோண்டி பிணங்களையும் சாட்சிகளையும் தடையங்களையும் அதில் போட்டு மறைத்து  அழித்துவிடுவான்,பிணங்களை எரியூட்டி சாம்பலையும் கரைத்துவிடுவான்,குற்றத்தை மறுப்பதோடு மட்டுமல்லாமல் பாதிக்கபட்டவர்மேலே திருப்பிவிட்டுவிடுவான்,குற்ற விசாரணைகளையும் தடுக்க செய்வான்,நேரடி சாட்சிகளையும் மிரட்டிக்கொண்டே இருப்பான் போன்ற வல்லுனர்களின்கூற்றுக்கிணங்க இவை அனைத்து ஈழத்திலும் நடந்தேறின.
    ஆவணப்படுத்தப்பட்ட இவைபோன்ற சான்றுகளை சுயாதினமான விசாரனைக்கு உட்படுத்த படும்போது தமிழ் இனவழிப்புப்பற்றி மேலும் பல உண்மைகள் வெளிவரும்.
    சிங்களவனின் இனவழிப்பு மறுத்தலை  தடுக்காவிட்டால்
    • இனவழிப்பு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும்.
    •  தண்டனை விலக்கு (IMPUNITY) குற்றவாளியை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும்.
    •  பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த அடையாளங்களையும் சிதைத்து அவர்களின் தேசிய கலாச்சார குறியீடுகளை அழிக்கும் இந்த செயல்பாடு, புனரமைப்பிற்கு பெரிய சவாலாக ,தடையாக அமையும்.
    •  வரும்காலங்களில் புதுப்புது இனவழிப்புக்குற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.
    •   இலங்கை அரசோ மற்ற உலக நாடுகளோ ஆக்கபூர்வமான எந்தவொரு நேர்மறை கட்டுமானச்செயல்பாடுகளில் ஈடுபடாமல் தமது  கடைமையை தட்டிக்கழித்து கொண்டே இருக்கும்.
        இனவழிப்பு குற்றவியல் வல்லுனர்கள் கூற்றுப்படி 12 வழிகளில் குற்றத்தை இனவழிப்பு கொலையாளி மறுக்கலாம் என்பது பற்றியும் , சிங்களவன் இனவழிப்பை எங்கணம் மறுக்கிறான் பற்றியும் இப்போது பார்ப்போம்.
    1. கேள்வி எழுப்பி புள்ளிவிவரங்களை குறைத்துக்காட்டுதல்   (Question and minimise the statistics)  
     20,000 இக்கு மேற்ப்பட்ட கொலைகள் அதுவும் சிங்கள ராணுவத்தால்  நடந்தேரியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் ஆதாரத்தோடு எடுத்துக்கூறினாலும் இலங்கை அமைச்சர்களின்   சவடால் அதை மறுப்பதாகவே உள்ளது. படிக்க 
    2.உண்மை விளம்பிகளின் ஊக்கத்தை சிதைத்தல் (Attack the motivation of the truth-tellers)
       உண்மையை பகிரங்கப்படுத்திய ஐ .நா அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியது,channel 4 ஊடக நிருபரை வெளியேற்றியது,போர்க்குற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய  ஊடகத்தை பற்றி அவதூறாக பரப்பியது ,எரிக் சொளிம் பற்றிய கருத்துக்கள் ,பாலியல் வல்லுறவை இலங்கை ஆயுதமாக பயன்படுத்தியதாக கோரிய அமெரிக்க அமைச்சரை கூட தனிப்பட்டமுறையில் இலங்கை பிரதமர்  விமர்சித்தது,இன்னும் பல உள்ளன
    3. சாவுகள் தவிர்க்கமுடியாதது என வாதிடல்( Claims the deaths are inadvertent)
         புலிகளுக்கு எதிரான போர் ,பயங்கரவாதத்திற்கெதிரான போர்  என்று பெயரிட்டு  பக்க அழிவுகள் ,கொலைகள் (collateral damage) தவிர்க்கமுடியாதது என்று உலகை இலங்கை நன்றாக ஏமாற்றியது.
    4.பாதிக்கப்பட்டோர் அந்நியன் என வலியுறுத்துவான் ( Emphasize the strangeness of the victim)
           தமிழினம் ஒரு சிறுபான்மை இனம். அது பெரும்பான்மை சிங்களத்திடம்  எந்த உரிமைகளையும் கேட்டு போரிடாமல் அடங்கிப்போகவேண்டும் என இலங்கை முன்னால் ராணுவ தளபதி கூறியது தமிழன் வேற்றுவன் என்று சிங்கள மனவமைப்பை உணர்த்துகிறது.
    5.சாவுகளை நியாயப்படுத்துதல் Rationalize the deaths)
        முன்னர்  கூறியது போல் பக்க அழிவுகள் ஏற்றுக்கொள்ளதக்கதுதான் என்ற சிங்கள் வாதத்தை உலகமும் ஏற்றுக்கொண்ட கொடுமையை விவரிக்க தேவையில்லை
    6. மற்ற குழுக்களின் மேல் பழிபோடுதல் (Blame other parties for the killings)
             அத்தனை கொலைகளையும் செய்தது தமிழரை  பிரதிநித்துவப்படுத்தும்  புலிகள் தான் என்ற சிங்களத்தின் பசப்புவாதத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
    7.அமைதி வழியிலிருந்து குற்றவாளி ஓடிவிடுவான் என பயந்து எதிர்க்காமல் இருப்பது (Avoid antagonising the genocidist who might walk out of peace processes)
        நாங்கள் உலக நாடுகளை எச்சரித்தும் ,அவை தமது முகமைகளை  இலங்கை அரசு புறந்தள்ளிவிடுமோ  என்ற அச்சத்தின் காரணமாகவே வாய் மூடி  இருந்தன என ஒரு ஐ.நா அதிகாரியே போட்டுடைத்தார்.ஐ.நா அதிகாரியான நம்பியார் கூட இலங்கையிலுள்ள ஐ.நா அதிகாரிகளை அனுசரித்து போகுமாறு பணித்ததாக ஒரு செய்தியும் உண்டு.
    8.பொருளியல் காரணங்களுக்காக மறுப்பை நியாயப்படுத்த முயல்வது (Justify denial in favour current economical interests).
           இந்தியாவும் சீனாவும் தமது பிராந்திய வல்லாதிக்க நலன்களுக்காகவே இலங்கையை  எந்தவொரு குற்ற விசாரணைகளில் இருந்தும் காத்து நிற்கின்றன.மேற்குலக நாடுகள் ஒரு அணியாகயும் கீழத்தேசங்கள் ஒரு அணியாகவும் ஈழ  பிரச்சனையில்  தத்தமது விருப்பு வெறுப்பின் அடிப்படையிலே பிரிந்து  நிற்கின்றன.
      
    9. பாதிக்கபட்டோர்கள் சிறப்பாக பராமிக்கப் படுவதாக வாதிடல்  (Claims the victims are receiving good treatment)
           உலகத்திலேயே மிகச்சிறப்பாக தமது நலன் புரி முகாம்கள்தான்   பராமரிக்கபடுவதாகவும் அதனாலையே  வெளியில் அனுப்பிய மக்கள் மீண்டும் மீண்டும்   முகாம்களுக்கு திரும்பிவருவதாகவும் இலங்கை அமைச்சர் சமர சிங்கே கூறுவது எவ்வளவு தூரத்துக்கு உண்மையாக இருக்கும்.
    10.தற்கால நிகழ்வுகள் இனவழிப்பு இல்லை என வாதிடுதல் (Claims what is going on does not fit the definition of GENOCIDE)
         சிங்களவன் பெரும்திரள் கொலைகளையோ தடைசெய்யப்பட்ட கருவி பயன்பாட்டையோ இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை .உலகம்  தொடர்ந்து வலியுறுத்தியும் கூட கல்லின் மேல் எழுத்தாக இருக்கும் போர்க்குற்ற விசாரணையை கூட அவன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.அப்புறம் எங்கே இனவழிப்பை பற்றி சிந்திக்கப்போகிறான்.
    11.பாதிக்கப்பட்டோரையே குறை கூறுதல் (Blame the victims )
             சிங்களனின் தமிழின விரோத கொள்கைகளை சொல்லித்தெரிய  வேண்டியதில்லை.
    12.அமைதியும் புனரமைப்புமே இனவழிப்பு குற்றசாட்டுகளைவிட முக்கிய எனக்  கூறுதல்
    (Say peace and reconciliation are more important than blaming people for GENOCIDE)
               இலங்கை அதிபர் லிபியா சென்றிருந்த போது செய்தியாளர் கூட்டத்தின் வாயிலாக இதையேதான் கூறிக்கொண்டு இருந்தார்.

          மேற்க்கண்டவையாவும் Israel.W.Charney என்ற இனவழிப்பு அறிஞர் உருவாக்கிய, இனவழிப்பு மறுத்தல் பற்றிய கோட்பாடுகள் ஈழ பேரவலத்தில் எவ்வாறு பொருந்துகின்றன என்ற தேடலின் தொடக்கம் மட்டுமே.
              ஏன் ஈழ பேரவலத்தை இனவழிப்பு என உலகம்  ஏற்றுக்கொள்ளவில்லை?
            ஈழ அவலம் இனவழிப்பு தான் உலகம் உணர்ந்து இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள போவதில்லை.இனவழிப்பு என்று உறுதிப்படுத்தப்படுமானால் (ARTICLE-1) இன்படி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் அதை தடுக்கவோ,தவிர்க்கவோ அல்லது குற்றவாளியை தண்டிக்கவோ கடமைப்பட்டுள்ளது.கைச்சாற்றிட்ட நாடுகள் உலக ஒழுங்கை உள்வாங்கிக்கொண்டு, .அது தமக்கு எதிராக இருப்பின் தமது சட்டப்பூர்வமான
     கடைமையை தட்டிக்கழித்தே வந்துள்ளன.தடுக்கமுடியாமல் போன ருவாண்டா மற்றும் ஈழ இனவழிப்புக்களே இதற்கு சாட்சி.
            மேலும் மேலும் இனவழிப்பு நிகழ்த்தப்படுவதை தடுத்து நிறுத்தும் நம் பெருவிருப்பு  என்பது ,  நடந்து முடிந்த ,நடக்கின்ற பேரவலத்தை, இனவழிப்பு தான் என உலக அரங்கில்  பறைசாற்றி அதை உலக நாடுகளும் உறுதிசெய்து  சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவைப்பதில் தான் அடங்கி இருக்கிறது .அதோடு மட்டுமல்ல ஈழ விடுதலை போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வானது இதிலிருந்து  முன்னெழுந்து சென்றால் தான் இன்னும் வீரியமாக இருக்கும்.

        2 comments:

        மிக்க நன்றி நண்பரே....மேலும் உங்களின் படைப்புகளை எதிர்பார்கிறோம்.

        தமிழ்செய்திகள் குழு உறுப்பினர்
        தவசி

        //மேலும் மேலும் இனவழிப்பு நிகழ்த்தப்படுவதை தடுத்து நிறுத்தும் நம் பெருவிருப்பு என்பது , நடந்து முடிந்த ,நடக்கின்ற பேரவலத்தை, இனவழிப்பு தான் என உலக அரங்கில் பறைசாற்றி அதை உலக நாடுகளும் உறுதிசெய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவைப்பதில் தான் அடங்கி இருக்கிறது .அதோடு மட்டுமல்ல ஈழ விடுதலை போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வானது இதிலிருந்து முன்னெழுந்து சென்றால் தான் இன்னும் வீரியமாக இருக்கும்.//


        வழிமொழிகிறேன்.