Sunday, November 15, 2009

அடுத்த தளத்திற்கு இட்டு செல்கிறதா மாவீரர் நாள் 2009

Posted by soundarasolan On 3:05 AM 0 comments

மாவீரர் நாளோடு நமது பெருவிருப்பையும் விருப்பின் நியாயத்தையும் நீர்த்து போக செய்ய சகல ஏற்பாட்டோடு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறான் பகைவன் .எதிரி மட்டுமல்ல, மற்றையோரும் கணித்து வைத்து கொண்டிருக்கும் எண்ணவோட்டத்திற்கு இசைவாக
சராசரியானவனின் நிலை எடுத்து முடங்கப்போகிறோமா?.அல்லது சமகால வரலாறு நமக்கு அளித்த தெரிவுகளை பெற்றுக்கொண்டு கடந்த கால நினைவலைகளில் தோய்த்தெடுத்த எண்ணத்தின் அடிப்படையில், புதிய போர்களஒழுங்கை சமைக்க போறோமா?
இதுதான் இப்போதைக்கு எதிரிக்கு மட்டுமல்ல நமக்கும் முன் நிற்கிற கேள்வி;
முப்படைகளும் அரணமைக்க , மறந்து போன புறநானூற்றையும் புதுப்பித்து, சமகால அனைத்து தேச அடிப்டை கட்டுமானங்களையும் உள்ளடக்கிய தேசத்தை ஒழுங்கமைத்து, தமிழினம் தன்னைத்தானே பல நூறு ஆண்டுகளுக்கு பின் ஆண்டு கொண்டிருந்தது .,பகையும் துரோகமும் பிண்ணிபிணைந்து சூழ்ந்து நிற்க அவற்றை துச்சமென நினைத்து செம்மாந்து பீடு நடைபோட்டது. இது இன எதிரியான சிங்களத்திற்கு மட்டுமல்ல பிராந்திய மற்றும் அனைத்துலக வல்லாதிக்க சக்திகளுக்கு இடையூறாகவே பட்டது.புலி பயங்கரவாதம் என்ற எதிரியின் ஒற்றை விசம கூச்சலுக்கு, உலகும் பலியாகி தேச இறைமை , உலக பொதுஅமைதி ஒழுங்கமைப்பு போன்ற போலித்தன கேடையங்களை முன் பிடித்து பயங்கரவாத அழிப்பு என்ற சுய நலம் மற்றும் குரூரத்தால் தீட்டப்பட்ட வாளால் வெட்டி, தியாக தேசத்தை சின்னாபின்ன ப்படுத்திவிட்டது.


முள்ளிவாய்க்காலோடு முடிந்து விட்டிருக்கவேண்டிய இனவழிப்பு இன்னும் தொடர நாமே அனுமதிக்கலாமா ?பயங்கரவாத அழிப்பு என்ற ஒற்றை போர்கலனை எதிரியிடம் பறிக்க, தன் சுயத்தையே அழித்து தன் இருப்பை மறைத்துகொண்டுவிட்டபுலிகளின் நினைவலைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டாமா? நிராயுதபாணியாக நிற்கும் எதிரியை ஆசுவாசி படுத்திக்கொள்ள அனுமதிக்கலாமா?பொய் வேடந்தரித்து நிற்கும் அவனின் ஆதரவு சக்திகளை அம்பலப்படுத்தி இருக்கவேண்டாமா.
பிரபாகரனின் முடிவு அல்லது புலிகளின் ஒடுங்கல் என்ற புள்ளியில் உறுதியாக நின்று கொண்டு நாம் இந்நேரத்திற்கு போராட்டத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டாமா?.முள்ளி வாய்க்கால் இனவழிப்புக்கு நியாயம் கேட்டு எதிரியோடு இணைந்து நின்ற ஏனைய சக்திகளை அவர்கள் விட்ட வழியிலே சென்று உலுக்கி இருக்க வேண்டாமா.? நமது தேசிய இருப்பு மற்றும் அடையாளத்தை முன்னைய விட உறுதியாக அனைத்துலக சிந்தனாவோட்டத்தோடு இணைத்திருக்க வேண்டாமா?நமது நியாயமான கேள்விகளுக்கும் கோபத்திற்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு, நயவஞ்சகனோடு கைகொத்து நின்ற இந்த நவ நாகரிக உலகத்தை தள்ளி விட்டிருக்க வேண்டாமா?பிற தேச ,பிற இனங்களின் கழிவிரக்கம் மட்டுமே நமக்கு விடுதலையை பெற்றுத்தருமா? நமது இந்த பலகீனமான் மனவமைப்பால் எத்தனை இழப்புக்கள் ,எத்தனை படுகொலைகள்.
புலிகள் குழந்தைகளை போருக்கு பயன்படுத்துகிறார்கள் என்று பசப்பித்திரியும் உலகத்திற்கு தெரிவிக்க வேண்டாமா, நமது சிறுவன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர்க்குணத்தை பற்றி .
பிரபாகரன் வருவார் ,புலிகளும் மீண்டெழுந்து வருவார்கள் போர்கோலம் பூணுவார்கள். மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கும் என்ற நிலையில் தான் இன்றும் நிற்கிறோம். ,புலிகளாலே கைவிடப்பட்ட அல்லது தற்காலிகமாகவது அறுத்துவிடப்பட்ட இந்த ஒற்றை நூலேணியில் தான் நாம் மீண்டும்மீண்டும் பயணிக்க வேண்டுமா?அல்லது அவர்களையும் பயணிக்க நிர்பந்திக்க வேண்டுமா?எதிரியிடம் பறித்த வாளை மீண்டும் கொடுத்து நம்மை வெட்டிவீழ்த்த அனுமதிக்கலாமா? எந்தபிடிக்குள்ளும் மாட்டாது எதற்கும் பொறுப்பேற்காமல் நழுவிச்செல்லும் எதிரியை எப்போது வளைத்து பிடிக்கப்போகிறோம்.. உலக போரியியல் வரலாற்றில் வெற்றியாளனால் பொதுமக்கள் சிறைபடுத்தபடுவது இது தான் முதல் முறை. தளைப்படுத்தப்பட்டஅப்பாவி மக்களையே இன்னும் விடுவிக்கமுடியவில்லை.இனி எப்போது போர் கைதி களை விடுவிக்கபோகிறோம். இந்த பலவீனமான மனவமைப்பால் எத்தனை இழப்புக்கள்.எத்தனை கொடூரங்கள்.
பயங்கரவாத எதிர்ப்பு என்ற முகமூடியை உலகம் தன் சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பூண்டுள்ளது.இப்போது எதார்த்தத்தை ஏற்றுகொண்டாலும் தரித்த முகமூடியை களைய வெட்கப்படுகிறது.கூச்சப்படுகிறது. தலைவரின் இருப்பு உறுதி செய்யப்படுமாயின் சுய நல வல்லாதிக்க அச்சில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலக இயக்கம் தற்போதைக்கு நமக்கு எதிராக இயங்காவிட்டாலும் தனது பொறுப்பு,கட்டாயத்தை தட்டிகழித்துவிட்டு நமக்கு ஒத்தினையாது வேறு திசையில் இயங்க தொடங்கிவிடும்.சிங்களமும் தனது இன்வ்ழிப்பையும் போக்கள ஒழுக்கமீறல்களையும் நியாயப்படுத்திவிடும். அனைத்தையும் மூடி மறைத்து முலாம் பூசி எக்காளமிடும்.தர்மத்தின் தண்டனையில் இருந்து கூட தப்பிவிடகூடும்.

போராட்டம் இப்போது ஈழத்தில் இல்லை .உலகமயபடுத்தபட்டுவிட்டது.அறிவின் தளத்தில் இயங்கிக்கொண்டு இருக்கிறது..தற்போது மீட்டுருவாக்கிருக்கும் போர்க்களம் என்பது எதிரியின் கைகளுக்கு மட்டுமல்ல ,,அவனது சிந்தனைக்கு கூட கிட்டும் தொலைவில் இல்லை.இப்போரில் நமக்கு இழப்போ தோல்வியோ கிடையவே கிடையாது.எதிரிதான் அல்லல் படப்போகிறான்.பலப்பல பரிமாணங்களோடு பல்வேறு ஆயுத கொள்வனவுகளோடு ,போர்வீரன் மட்டுமின்றி பல்துறை வல்லுனர்களும் ஏன் பாமரனுகூட இப்போது போர்கோலம் பூணப்போகிறான்.. அது ஒரு இயங்கு போர்களமாக உலகமெங்கும் சுற்றிக்கொண்டிருக்கபோகிறது. . பல இடங்களில் பல தளத்தில் எதிரியை நிர்மூலமாக்கபோகிறது. எதிரிக்கு, யார் வாள் வீசப்போகிறான்,,எங்கிருந்து வீச்ப்போகிறான்,,எப்போது வீசப்போகிறான் எண்பது எதுவுமே தெரியப்போவதில்லை..
பிரபாகரன் உலக விடுதலைபோர் வரலாற்றில் ஒரு உயிர்ப்புள்ள தத்துவம். பிரபாகரனை ஒரு இயக்கமாக நடத்துவோம்.பிரபாகரத்தையே உந்து விசையாக ,ஈர்ப்பு சக்தியாக, இயங்குதளமாக ,உள்வாங்கிக்கொள்வோம்.நமக்கான புலத்தில் வேர்விட நமக்கான வெளியில் கிளைவிட பிரபாகரத்தையே உயிர் சக்தியாக உட்கொள்வோம்.பிரபாகரத்தை வைத்து எதிரி நம்மை கலக்கமடைய ,சோர்வடைய செய்தால் அனுமதியோம்.
எந்தபுள்ளியில் நின்றுகொண்டு சிங்களவன் அனைத்து வல்லாதிக்க சக்திகளை ஒன்று திரட்டி நமக்கு எதிராக திருப்பிவிட்டனோ அங்கே போய், நாம் களப்பணிகளை தொடங்குவோம். ஒன்றேகால் கோடி சிங்களவன் செய்யமுடிந்ததை உலகமெலாம் பரவி இருக்கும் எட்டு கோடி தமிழ் மக்களால் செய்யமுடியாதா.
ட்டுபேர் தலைமை ஏற்போம். என்பது பேர் அனைத்தையும் ஒருங்கிணைப்போம்..எண்ணூறு பேர் கலந்து ஆலோசித்து களம் அமைப்போம்.எட்டாயிரம்பேர் இறங்கிபோய் நமக்கான இருப்பையும் அதற்கான நியாயத்தையும் , உலகுக்கு சொல்வோம்.எட்டு லட்சம் பேர் நமது மக்களை எழுப்பிவிடுவோம்.எண்பது லட்சம் பேரும் வீதிக்கு வருவோம்.எட்டு கோடி பேரும் இலங்கையை மட்டுமல்ல மொத்த உலகத்தையும் முடக்குவோம்.அப்புறம் தெரியும் பார் ,கடைசி சிங்களனும் காணாமல் போய் இருப்பான்.
தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈகிக்க உறுதிபூண்ட வீரர்கள் ,தமது ஈகம் சிறுமைப்படுத்தப்படுவது கண்டும் அமைதிக்காக்கின்றார்களே, இது ஒன்று மட்டும் போதாதா அவர்களின் ஊடாடிக்கொண்டிருக்கும் உயிர்ப்புள்ள தலைமையை பறைசாற்ற.உறைநிலையில் இருக்கும் அவர்களுக்கு தெரியும் எப்போது நீர்மமாகி வழிந்தோட வேண்டும் என்றும் எப்போது தீபமாகி எரியவேண்டும் என்பதும்.
இப்போதைய புலிகளின் நிலைப்பாட்டால் தாக்கமுற்ற தமிழர்களில், புலம்பெயர்ந்தோர் ,இலங்கை வாழ் தமிழர் ,ஈழம் வாழ் தமிழர்கள் ,வேற்று நாடுகளை சேர்ந்த தமிழர் போன்றவர்களை கொஞ்சம் உழைத்தாலே நாம் கரைஎற்றிவிடலாம்.ஆனால் இந்திய தமிழர் குறிப்பாக தமிழகத்தார்கள் தான் கடுமையாக பாதிக்கபடப்போகிறார்கள்.அவர்கள் தனி மனித துதியிலே ஊறியவர்கள்.ஒரு மேய்ப்பனையோ ,மீட்பனையோ எதிர்பார்த்து காத்திருப்பவர்கள்.சுயத்தால் நிமிராத ,அடிமை விலங்கை தனக்குதானே பூட்டிக்கொண்டு முடங்கிபோக துடிக்கும் மக்கள்.பாவம் ,அவர்கள் என்ன செய்வார்கள் அப்படியே வளர்க்கப்பட்டும் வார்க்கப்பட்டும் விட்டார்கள்.கடாரம்கொண்டதையும் கங்கை கொண்டதையும் இமயத்தில் கொடி நாட்டியத்தையும் மறந்து விட்டார்கள். மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள்.ஆனால் அவர்களின் ஈழதமிழர் பாசமானது அப்பழுக்கற்றது , ஈழ துயரம்அதிகமாக முட்டுகையில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளவும் தயங்காதது. தன்னைத்தானே வருத்திக்கொள்வது தான் போர்கள அறம் என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள். இந்த இடம் தான் எதிரிகள் நன்றாக சதிராட எதுவானவிடம்.இந்த இடத்தை செப்பனிட்டு சீர்செய்தால் தான் ஈழப்போராட்டம் தொய்வடையாமல் வீறு கொண்டு எழும்.விடுதலைக்கு விரைவாக இட்டு செல்லும்.
மாவீரர் நாளில் நாம் கட்டி எழுப்பி இருக்கும் போர்களத்திற்கு எதிரி கண்டிப்பாக வருவான்.அவன் குழம்பிபோகட்டும் தலைவரை அங்கு காணாமல்.அவனுக்கு கண்டிப்பாக தெரியும் தலைவரைப்பற்றி.ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில் இதுவரை நடந்துவந்த நிகழ்வுகள் உலகம்பூராவும் வியாபித்து நிற்பதை கண்டு கலங்கட்டும். ஆயிரத்தில் இருந்த போராளிகளை , ,இப்போது லட்சத்தில் கோடிகளில்உருவாக்கிவிட்டு விட்டோமே என்று அஞ்சட்டும். அங்கேயே அவனை முதல்வெற்றிக்கொள்வோம்.

0 comments: