உயிரில் வரைந்த ஈழ ஓவியங்கள்,
அண்மையில் தான் நம் சகோதர,சகோதரிகளின் உயிராயுதத்தை பார்த்தேன்.பார்த்தேன் என்பதை விட பகுப்பாயப்பட்டேன் என்பதுதான் சரி.. என்னை நானே சுத்திகரிக்க , வெந்ததை தின்று வந்ததையெல்லாம் பேசி அலையும் ஒரு விட்டேத்தியான மனபோக்கை நங்கூரம் பாய்ச்சி நிலைநிறுத்திக்கொள்ள ,எமக்கான இருப்பை உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டியது என்றே கூறுவேன்.
, ஒவ்வொரு ஓவியமும் மனிதத்தின் அதி உச்சபட்ச தியாகத்தின், தீரத்தின்,மதிநுட்பத்தின் உறைவிடமாக மின்னுகிறது. அவை,சமகாலத்தில் மனிதகுலம் கைகளில் எடுக்கவே அச்சப்படும் உயிராயுதத்தை ஒன்றை மட்டுமே தரித்து நிற்கின்றன. என் மொழியை என் இனத்தை பற்றி எனக்கு தெரிந்த வார்த்தைகளில் பேசுகின்றன.. அவை ,என் அடையாளத்தை வெளிச்ச படுத்த தன்னையே திரியாக்கி கருகுகின்றன... உயிரோவியத்தின் வேள்வியில் ,கோடியில் ஒரு பங்கும் கூட, என் பங்களிப்பு இல்லை என எனக்கு தெரியும்.ஆனாலும் உலகம் என்னையும் அவற்றோடு சேர்த்து வைத்து மிரட்சியாக ,ஆச்சரியமாக நோக்கும் போது எனக்கு கூச்சமாகவே இருக்கிறது. ஆமாம் அவர்கள் என் இன ஆன்மாவாகிப் போனவர்கள்.
அந்த உயிரோவியங்கள் , என்னுள்ளும் ஒருசலனத்தை விதைக்கிறது. அவை,,என் இனம் பற்றய என் தாழ்ந்த மதிப்பீடுகளை களைஎடுக்கிறது.எனக்கு இது நாள் வரை பயிற்றுவிக்கப்பட்டது அத்தனையும் பொய் என்று உணரவைக்கிறது. .அவை , என்னை தகுதிப்படுத்தி ,அவற்றின் சிந்தனா தளத்திற்கு ,அவை செயல்படும் வெளிக்கு என்னையும் கட்டி இழுத்து செல்வதை உணரமுடிகிறது.எந்த உயரத்திற்கும் என்னால் பறந்து செல்ல முடியும் .எந்த அதள பாதாளத்திற்கும் என்னால் மூழ்கி செல்லமுடியும் என்ற உறுதியை எனக்கு உணர்த்திவிட்டன .தேச விடிவை மற்றுமின்றி என் சிந்தனா விடிவை ,செயல்பாட்டு விடிவையும் அவை உறுதி செய்கின்றன . அங்குஇங்கு என்றில்லாமல் அண்டவெளி எங்கும் வியாபித்து நிற்கும் என் இன ஆன்மாவாகிப்போன அந்த உயிரோவியங்கள் எம் இனத்தை மனித குலத்தின் உச்ச பட்ச வசந்தவெளிக்கு வெகு விரைவில் இட்டு செல்லும் என்பது திண்ணம்.
0 comments:
Post a Comment