Sunday, November 29, 2009

மாவீரர் நாளில், இலங்கை முற்றுகையை உடைத்தெறிந்து வெளியேறினான் தமிழன்

Posted by soundarasolan On 2:47 AM 3 comments

                முள்ளி வாய்க்காலோடு முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.கே.பி.கடத்தலோடு   முடித்து விட நினைத்தான் முடியவில்லை.தளபதி ராமை வைத்து முடித்துவிட நினைத்தான் முடியவில்லை.இந்த மாவீரர் நாளோடு முற்றாக முடித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான் முடியவில்லை .எதிரியானவன் தம் அத்தனை சக்திகளையும் திரட்டி தமிழினத்தை வல்வளைத்து அமைத்திருந்த முற்றுகையை , தமிழன் தற்போதும் மிக சாதுரியமாக ஊடறுத்து வெளியேறிவிட்டான்.

              மாவீரர் நாளில் கண்டிப்பாக பிரபாகரன்  வெளிஉலகுக்கு வரமாட்டார் .இதைவைத்தே பிரபாகரனின் மறைவை உறுதி படுத்தி தனிமனித துதியில் திளைக்கும் தமிழினத்தின் அரசியல் பெருவிருப்பை நீர்த்துபோக செய்யலாம் என்ற எதிரியின் கனவு சிதைந்து போனது.தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் உந்துசக்தி பிரபாகரன் தான்.அவரது உருவத்தையோ உருவகத்தையோ சிதைத்து விட்டால் இயக்கத்தின் வீச்சு மட்டுப்படுத்தப்படும் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அதனால்  எந்த ஒரு எதிர்மறை விளைவையும் ஏற்படுத்திவிட முடியாது . .எந்த ஒரு சூழலிலும் ,எந்த ஒரு  வெளியிலும்  இலக்கு நோக்கிய  லட்சிய பாதையில் தமிழினத்தை அவரால் அழைத்து செல்லமுடியும்.ஏன்னென்றால் பெரும்பான்மை தமிழினத்தின் உயிர்வளியாக பிரபாகரன் சுவாசிக்கப்படுகிறார்..அவரின் எண்ணவோட்டங்களே தமது உந்து விசையாகவும் ,அவரின் நினைவலைகளே தமது இயங்கு தளமாகவும் உள்வாங்கிக்கொண்ட மக்களிடத்தில், அவர் நேரில் வந்து தான் எதையும் சொல்ல வேண்டும்  என்பதில்லை.இதனை புரிந்து கொள்ள முடியாத எதிரியும் பிரபாகரனை மீண்டும் மீண்டும் சாகடித்து தனது எண்ணம் ஈடேறாமல் தவிக்கிறான்.பதட்டப்படுகிறான்.
          சிங்களவன்,  தமிழனை குழப்புவதாக நினைத்து கொண்டு, தானே ஒரு மாவீரர் நாள் உரையை தயாரித்து அதனை தனது வதை கொட்டடியில் அடைக்கப்பட்ட  ஒருவரை வைத்து வெளிஉலகுக்கு வாசித்துகாட்டினான்.புலிகளும் இதனை எதிர்ப்பார்த்து மக்களை எச்சரிக்க, கூமுட்டை சிங்களனும் அதனையே சரியாக செய்தான்.இப்போது குட்டு வெளிப்பட்டுவிட்டது. , 
அதுவே அவன் செய்த குற்றத்துக்கான ஒப்புதல் வாக்குமூலமாக இப்போது காட்சியளிக்கிறது.
   ராம் பெயரால் வெளியிடப்பட்ட உரையின் ஒலிப்பதிவு வலைப்பதிவிற்கு  கீழே இணைக்கப்பட்டுள்ளது.
   தளபதி ராமின் பெயரால் சிங்களவன் வெளியட்ட அறிக்கையில் சில வாக்குமூலங்கள்
  •     காலனி ஆதிக்கத்திற்கு பின் சிங்கள பேரினவாதமே தமிழனை நசுக்கியது.
  •    தமிழரின் அகிம்சை போராட்டத்தை வன்முறைவழி நின்று அழித்தொழித்தது.
  •    தமிழன் எழுச்சிக்கொள்ளும் போது ஒப்பந்தம் போடுவதும் தமிழன்  அமைதியடையும்   போது கிழித்து  எறிவதும். 
  •     பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது 
  •      பல்லாயிரக்கணக்கான மக்களை அங்கவீனராக்கியது.
  •     தாயை இழந்த குழந்தையும் கணவனை இழந்த மனைவியும் குழந்தையை இழந்த 
  •                    தாயுமாக அனாதையாக்கப்பட்டுள்ளது
  •     மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அரசியல்அநாதையாக்கியது 
  •     இறுதி நாட்களில் என்ன நடந்தது என்று தெரியாமல் மறைத்தது
  •      முள் கம்பி வெளிக்குள் அடைத்து வைத்து   வதைப்பது.
           சிங்களவன் உணர்த்த நினைப்பவை 
  •       பிரபாகரன் கண்டிப்பாக மரணமடைந்து விட்டார் 
  •       இனி இயக்கத்திற்கு ராம் தான் தலைவர்.இதுவே தலைவரின் விருப்பம் 
  •       புலம்பெயர்ந்த மக்கள் நாட்டை மீள்கட்டமைக்க உதவ வேண்டும்.
  •       ஆயுத போராட்டம் என்பது இனி இல்லவே இல்லை.
         ஆதிக்க சக்தியின் கைக்குள் இருக்கும் ஒருவனால் எப்படி விடுதலைபோரை  முன்னெடுக்க  முடியும்.போராட்டமே இல்லாத போது எதற்காக பணஉதவி .ஒரு பலகீனமான தலைமையாக காட்டப்பட்ட ஒன்றன்பின் மக்கள் எப்படி அணிதிரள்வார்கள்.
 சிங்களனிடம் எஞ்சி இருப்பது ராம் மட்டும்தானா.சிங்களனிடம் பிடிப்பட்டதாக கூறப்பட்ட மற்ற தளபதிகள் யாவரும் கொல்லப்பட்டுவிட்டனராஅல்லது யாருமே அகப்படவில்லையா. இதை போன்ற கேள்விகளுக்கெல்லாம் கூமுட்டை சிங்களவன் தான் பதில் சொல்ல வேண்டும்.
          பிரபாகரனின் சாவை உறுதிபடுத்தமுடியாத ,இறப்பு சான்று கொடுக்கமுடியாத சிங்களனையும் ராஜீவ் கொலைவழக்கை முடிக்கப்படாதபாடு படும் இந்தியனையும் உலகமே பார்த்து கைக்கொட்டி சிரிக்கிறது. இனவழிப்பு குற்றவாளிகள் ஒவ்வொருத்தனும் சாயம் வெளுக்க வெளுக்க நிர்வாணமாக நிற்கிறான்.
           தமிழகத்தை பொறுத்தவரை ,இதற்கு முன் மாவீரர் நாள் நிகழ்வானது யாதொரு தாகத்தையும் ஏற்படுத்தியதில்லை.பெரும்பாலான மக்கள் அதை பற்றிய புரிதல் இல்லாது இருந்தனர்.ஆனால் இந்த ஆண்டு மாவீரர் நாள் பெரும்பாலான சிற்றூர் ,சிறுநகர , பெருநகர பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது.இது எந்த ஒரு தலைவனின் கட்டளைக்கு இணங்கவோ செய்யப்படாமல் ஒரு  சுயாதின நிகழ்வாகவே மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது.பிரபாகரன் இறக்கவில்லை ,நலமோடு இருக்கிறார் என்று கூறிய தலைவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்ள சென்றுவிட்டனர்.தலைவர்கள் இங்கே இருந்து தான் களம் கண்டுருக்க வேண்டும்.இங்குள்ள துரோக புதர்களையும்  விரோத சருகுகளையும் அப்புறப்படுத்தி ஈழ விடிவை நோக்கி தமிழகம் பயணிக்க வேண்டிய பாதையை செப்பனிட தொடங்கி இருக்க   வேண்டும். அது தான் முறைமை.அனால் தமிழக மக்கள் இவர்களை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தாமே களமாட இறங்கி விட்டனர்.
                     தமிழர்கள் முன்னைக்காட்டிலும் இப்போது தெளிவிக்கப்பட்டுருக்கிறார்கள். செறிவூட்டப்பட்டுருக்கிறார்கள்  .
               இதுவரை சிங்களவன் ஈழவிடுதலைக்கு ஒற்றை பாதையையே திறந்து விட்டிருந்தான்.அதனையும்   இப்போது மூடி விட்டதாக கொக்கரிக்கிறான்.ஆனால் அவனுக்கு தெரியாது ,பலநூறு பாதைகள் திறக்கப்பட்டுவிட்டது என்றும் ஒட்டு மொத்த உலக தமிழினமும் அவற்றில் பயணிக்க போகிறது என்றும்.மிதிப்பட்டு சின்னாபின்னமாகும் போதுதான் அவனுக்கும் அவனுக்கு முண்டுகொடுத்து நிற்கும் அவன் நண்பனுக்கும் புரியும், தமிழனின் புறநானூற்றின் புதிய பதிப்பைப்பற்றி.

3 comments:

very good, well said, கூமுட்டை சிங்களன் சீக்கிரமே புரிந்து கொள்வான்.

உங்களின் படைப்புகள் மிக அருமையாக உள்ளன,
நீங்கள் எங்களின் தளத்தில் (http://tamilseithekal.blogspot.com/)இனணந்து செயல்பட விரும்பினால் தொடர்புகொள்ளவும்
நிமலா
தமிழ் செய்திகள் குழு உறுப்பினர்

உங்களின் படைப்புகள் மிக அருமையாக உள்ளன,
நீங்கள் எங்களின் தளத்தில் (http://tamilseithekal.blogspot.com/)இனணந்து செயல்பட விரும்பினால் தொடர்புகொள்ளவும்
நிமலா
தமிழ் செய்திகள் குழு உறுப்பினர்